Header

உண்மையில் யார் முட்டாள்?

உண்மையில் யார் முட்டாள்?

சிறுவன் ஒரு முடிதிருத்தும் கடைக்குள் நுழைந்தான்.

அப்போது அந்த கடைக்காரர் அங்கிருந்த வாடிக்கையாளரிடம் மெதுவாகச் சொன்னார் “இந்த உலகிலேயே இவன்தான் மிக முட்டாள் குழந்தையென்றும்

அதை இப்போது நான் உங்களுக்கு நிரூபிக்கிறேன் என்று.

அந்த கடைக்காரர் ஒரு கையில் 5 ரூபாய் நாணயத்தையும் மறுகையில் 2 ரூபாய் நாணயத்தையும் வைத்துக்கொண்டு அந்த பையனை அழைத்து உனக்கு எது ‌வேண்டும் என்று கேட்டார்?.

அந்தப் பையன் 2 ரூபாயைப் பெற்றுக்கொண்டு சென்றான்.

அந்த கடைக்காரர் சொன்னார் பார்த்தீர்களா,

இவன் முன்னேறப்போவதேஇல்லை என்று. கடையிலிருந்து சென்ற அந்த வாடிக்கையாளர்

அந்தப் பையன் ஒரு ஐஸ்கீரிம் கடையிலிருந்து வருவதைக்கண்டார்.

அவர் அவனிடம் சென்று ஒரு கேள்வி கேட்கலாமா என்று ‌கேட்டு ஏன் 5 ரூபாய்க்கு பதில் 2 ரூபாயை பெற்றுக்கொண்டாய்?

அந்தப் பையன் ஐஸ்கிரீமை நக்கிக்கொண்டே ‌ சொன்னான்

“எப்‌போ நான் அவரிடம் 5 ரூபாயை எடுக்கிறேனோ அன்றோடுஎனக்கு இந்த பணம் கிடைப்பதே நின்றுவிடும் என்று.

உண்மையில் யார் முட்டாள்?

”கதையின் நீதி:

எப்பொழுது நீ மற்றவர்களை முட்டாள் என்று எண்ணுகிறாயோ அப்போது நீ உன்னையே முட்டாளாக்கிக்கொள்கிறாய்.

வாட்ஸ் அப்-ல் வலம் வந்தது.