Header

நீங்கள் மில்லினியலா? சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள்

நீங்கள் மில்லினியலா? சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள்

 நீங்கள் மில்லினியலா?


சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள்!

நீங்கள் மில்லினியலா? இந்த கேள்வி பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தலாம் 1980ம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்களை தான் மில்லினியல் என்கிறோம். மில்லினியல்கள் முந்தைய தலைமுறையின் சேமிப்பு பழக்கம், இன்றைய தலைமுறையின் செலவு பழக்கம் இரண்டுக்குமே பழக்கப்பட்டவர்களாக தான் இருப்பார்கள்.பெரும்பாலானோ  இன்றைய சூழலில் அவர்கள் அதிகமாக செலவு செய்வது, சரியான சேமிப்பு பழக்கம் ஆகியவை இன்றி காணப்படு்கிறார்கள். இவர்கள் எப்படி சேமிக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

உங்களுடைய பேலன்ஸ் ஷீட்டை தயார் செய்யுங்கள்?

ஒரு நிறுவனம் நிதி ரீதியாக எந்த நிலையில் உள்ளது என்பதை அந்த நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டின் அடிப்படையில் மதிப்பிடுவார்கள். அதேபோல் உங்களது நிதி நிலை எந்த அளவில் உள்ளது என்பது உங்களது பேலன்ஸ் ஷீட் மூலமாக தான் தெரியவரும். அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில் நீங்கள் எந்த முதலீடுகள் வைத்துள்ளீர்கள், உங்களின் பேரில் உள்ள சொத்துக்கள் என்ன? என்பதை ஒருபுறமும், நீங்கள், வாங்கியுள்ள கல்விக்கடன் துவங்கி, உங்கள் பைக்கிற்கான இஎம்ஐ வரை உள்ள அனைத்து கடன் மற்றும் உங்களது நிதி பொறுப்புகளை ஒரு பக்கம் எழுதுங்கள் உங்கள் வருமானம் மற்றும் செலவு இரண்டுக்குமான நடுநிலை என்ன என்பது உங்களுக்கு புரியவரும் அதற்கேற்ப உங்கள் நிதிநிலையை சரிசெய்து கொள்ளுங்கள்.

பட்ஜெட் போடுங்கள்!

நீங்கள் தினமும் செலவு செய்வது துவங்கி ஒரு வாரம், அல்லது ஒரு மாதம் என அனைத்து விஷயங்களுக்கும் பட்ஜெட் போடுங்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் உங்கள் செலவு எப்படி மாறுபடுகிறது அதனை எப்படி குறைக்கலாம் என்ற விஷயங்களை கவனியுங்கள். உங்களது மாதபட்ஜெட் முடிந்தவுடன் அதில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை தவிர்க்க பழகுங்கள் அது உங்கள் செலவில் 10% எனில் நீங்கள் சரியாக திட்டமிடுகிறீர்கள் என வைத்து கொள்ளுங்கள்.

சம்பள உயர்வில் 50% சேமிக்க பழகுங்கள்!

உங்களுக்கு சம்பள உயர்வு வரும் நேரத்தில் உயர்ந்த சம்பளத்தில் 50% பணத்தை நான் சேமிக்க போகிறேன் என்று நீங்கள் உறுதியெடுத்து கொண்டால் நிச்சயம் உங்களால் ஒரு பெரிய தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் சேமித்துவிட முடியும். 5 வருடங்களில் உங்கள் சம்பளம் 20000 ரூபாய் அதிகரித்துள்ளது எனில் உங்களால் இந்த தொகையிலிருந்து மட்டும் சுமார் 1,00,000 ரூபாயை சேமிக்க முடியும் அதனை நல்ல வருமானம் தரும் முதலீட்டில் முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். இது தவிர உங்கள் சேமிப்பு மூலம் வந்த வருமானம் உங்கள் நிதி நிலையை நல்ல நிலையில் வைத்திருக்க உதவும்.


எப்போது சேமிக்க துவங்குகிறீர்கள்!

நீங்கள் எப்போது சேமிக்க துவங்குகிறீர்கள் என்பதை கவனியுங்கள். நீங்கள் 23 வயதில் வேலைக்கு வருகிற்ரிர்கள் எனில் நீண்டகால முதலீட்டில் நீங்கள் சேமிக்கிறீர்கள் என வைத்து கொள்வோம். நீங்கள் வேலைக்கு வந்ததில் இருந்து 10 வருடத்துக்கு நீங்கள் சேமித்து விட்டு பின்னர் உங்கள் குடும்ப சுமை காரணமாக நீங்கள் உங்கள் சேமிப்பை அப்படியே நீண்டகால முதலீடாக விட்டு விட்டால் அது நீங்கள் ஓய்வு பெறும் போது பெரிய தொகையாக உங்களுக்கு கிடைக்கும். அதனை தவிர்த்து நேரடியாக நீங்கள் 40 வயதில் சேமிக்க துவங்கி, முன்னர் சேமிக்க இருந்த தொகையை காட்டிலும் இருமடங்கு சேமித்தாலும் உங்களால் ஓய்வு பெறும் போது  அவ்வளவு பெரிய தொகையை சேமிக்க முடியாது. அதன் மூலம் வரும் வருமானம் இளம்வயதில் கிடைக்க இருந்ததை விட குறைவாக தான் இருக்கும். அதனால்   எப்போது சேமிக்க துவங்குகிறீர்கள் என்பதை புரிந்து செயல்படுங்கள்.


நிபுணர்களின் அறிவுரையை பின்பற்றுங்கள்!

சில நேரங்களில் போதிய அனுபவமின்றி முதலீடுகளில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். அதனை தவிர்க்க அனுபவமுள்ள நிபுணர்கள் அல்லது ஏற்கெனவே உங்களது வீட்டில் முதலீடுகள் மூலம் நல்ல லாபம் சம்பாதிப்பவரின் அறிவுரைகளை கேட்டு பின்பற்ற பாருங்கள். அது உங்களது வருமனாத்துக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இது அனைவருக்கும் பொருந்தும் விஷயமாக இருந்தாலும் மில்லினியல் பிரிவினர் தற்போது சேமிப்பு பழக்கம் குறைவாக உள்ளவர்களாக இருப்பதால் அவர்கள் முதலில் சேமிப்புக்காக கவனிக்க வேண்டிய விஷயங்களை கவனித்து பழகிவிட்டால் அவர்களது எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.நீங்கள் சேமிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தவுடன் ரிஸ்க் இல்லாத வங்கி முதலீடுகளில் முதலீடு செய்தால் வருமானம் சற்ரு குரைவாக தான் இருக்கும், அதேசமயம் ரிஸ்க் அதிகமுள்ள பங்குச் சந்தை முதலீடுகள் குறித்து நன்கு அனுபவம் இருந்தால் அதில் தொடலாம். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் முதலீடு தருவது நீண்டகாலத்தில் உங்களுக்கு லாபம் தரக்கூடியதாக இருக்கும்.
ஆரம்பம் முதலே இந்த விஷயங்களை கவனித்து சேமிக்க துவங்கினால் உங்கள் வாழ்க்கை சிறப்பாகும்.

Click Here :
Register for Technical Analysis Training in Chennai
Click Here
Register for Basic Share Market Training

Share Market Training - Contact  91- 9841986753