Header

தைரியம் கொடுத்த டெக்னிக்கல் அனாலிசிஸ்

தைரியம் கொடுத்த டெக்னிக்கல் அனாலிசிஸ்



நீங்கள் யார் :

முதலில் ஒருவர் டிரேடரா முதலீட்டாளரா என்பதில் தெளிவு பெற்ற பின் டிரேடரில் நீங்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். டே டிரேடர் என்றால் அன்றைக்கு வாங்கியதை அன்றே விற்றுவிட்டு வெளியேற வேண்டும். சுவிங் டிரேடர் என்றால் ஒரு வாரம் வரை வாங்கிய பங்குகளை வைத்துக் கொள்ளலாம். ஆக வர்த்தக முடிவுகளை சரியாக எடுக்க நீங்கள் யார் என்பதில் தெளிவு இருக்க வேண்டும்.

அதை எப்படி கண்டு பிடிக்க வேண்டும் என்பதையும் விளக்கினார். சிலருக்கு டே டிரேடர்களாக இருக்க ஆசை ஆனால் அவர்களின் நடவடிக்கைகளை வைத்து அவர்கள் சுவிங் டிரேடர்களாகவோ அல்லது இன்வெஸ்டார்களாகவோ இருப்பது நல்லது என்பதையும் எடுத்துச் சொன்னார்.

இங்க என்ன சொல்லுது :

மைண்ட் செட் டிரேடிங்குக்கு அது தானே எல்லாம்.  மூளை சொல்லும் விஷயத்தை தான் நாம் முடிவாக எடுக்கிறோம். ஆக ஒரு டிரேடருக்கு மைண்ட் செட் எப்படி இருக்க வேண்டும் என்பதை சில உதாராணங்களோடு விளக்கினார். அதே போல் எவ்வளவு லாஸ் ஏற்பட்டால் ஏற்றுக் கொள்ள முடியும் என்பதற்கும் ஒரு அருமையான சூத்திரம் மூலம் ஒவ்வொரு வரையும் சொல்ல வைத்தார். ஒருவர் சூத்திரம் மூலம் கணித்திருக்கும் அளவுக்கு லாஸ் எற்பட்டால் நாம் பொருத்துக் கொள்ளத் தான் வேண்டும், அதே நேரத்தில் ஒரு நாளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் லாஸ் ஏற்பட்டால் நிச்சயம் அதற்கு மேல் டிரேட் செய்யக் கூடாது என்பதையும் வலியுறுத்தினார்.


சப்ரஸ் :

சார் ச்ப்ரஸ் என்ற உடன் அடக்குவது என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். சப் - சப்போர்ட், ரஸ் - ரெசிஸ்டென்ஸ் இது தான் இதற்கு பொருள். மொத்தத்தில் கேன்டில் ஸ்டிக், பார் சார்ட், லைன் சார்ட் என்று எந்த சார்ட்டாக இருந்தாலும் சரி, பங்கு, கமாடிட்டி, ப்யூச்சர்ஸ், ஆப்ஷன், கரன்சி என்று எதில் வர்த்தகம் மேற்கொள்வதாக இருந்தாலும் சரி இந்த சப்ரஸ் முக்கியம். இந்த சப்போர்ட் ரெசிஸ்டென்ஸை வைத்துக் கொண்டு தான் சரியான டார்க்கெட், ஸ்டாப் லாஸ்களை நிர்ணயிக்க முடியும் என்பதை பல உதாரணங்களோடு காட்டினார்.

நான் யாரு, கேன்டில் ஸ்டிக்கை பாரு :

இன்றைய தேதியில், நேற்று வர்த்தகம் செய்யத் தொடங்கிய பிஞ்சுக் குழந்தைகள் தொடங்கி பல ஆண்டுகளாக சந்தையிலேயே திளைக்கும் அனலிஸ்டுகள் வரை பயன்படுத்தும் ஒரு சாதனம் கேன்டில் ஸ்டிக் சார்ட். இந்த சார்ட்டின் அடிப்படை தொடங்கி அதில் உருவாகும் கேன்டில்களுக்கு என்ன மாதிரியான பலம், பலவீனங்கள் உண்டு, அதில் ஏற்படும் பேட்டன்கள், டிரேண்டுகள் மற்று டிரெண்டு ரிவர்சல்கள் என்று பலவற்றையும் விளக்கினார். அவைகளை நடைமுறையில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பங்குகளை வைத்து கணக்கிட்டு காட்டினார்.

ரெட்புல் :

சார் ரெட்புல் டிரிங்க் இல்ல. ரெட்ரேஸ்மென்ட், புல்பேக். ரெட்ரேஸ்மென்ட் என்றால் என்ன அது எப்படி நிகழும், புல் பேக் என்றால் என்ன, புல் பேக் ஏற்பட்டால் என்ன வாகும் போன்ற விவரங்களை முழுமையாக விளக்கினார். இவற்றுக்கும் பங்குகளின் சார்ட்களை வைத்து விளக்கினார். இதில் ஃபெபினாச்சி விகிதங்கள் எப்படி பயன்படும் என்கிற விவரங்களை முழுமையாக எடுத்துக்காட்டுகளோடு விளக்கினார்.


இன்னும் இன்னும்..... :

சார்ட் பேட்டன்களான டபுள் டாப், ட்ரிபிள் டாப், ஆடாம் ஈவ், ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ், டபுல் பாட்டம், ட்ரிபிள் பாட்டம், இன்வெர்ஸ் ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ், ரிவர்ஸ் ஆடம் ஈவ், ஆர்.எஸ்.ஐ என்றழைக்கப்படும் ரிலேட்டிவ் ஸ்ட்ரெந்த் இண்டென்ஸ், மூவிங் ஆவரேஜ், மூவிங் ஆவரேஜ் கன்வர்ஜென்ஸ் மற்றும் டைவர்ஜென்ஸ் என்று பட்டியல் தொடர்ந்த படி தான் இருக்கிறது.


கற்றுக் கொள்வது செலவல்ல :

இன்வெஸ்டார்கள் மற்றும் சுவிங் டிரேடர்கள் இன்னும் சரியாக கணித்து முடிவுகளை எடுக்க நிறுவனத்தின் ஃபண்டமென்டல்களையும் தெரிந்து கொள்வது நல்லது. எனவே அடுத்து வருங்காலங்களில் நாணயம் விகடனின் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் வகுப்பிலும் கலந்து கொண்டு அறிவை மேம்படுத்தி நம் வர்த்தக முடிவுகளால் நஷ்டத்தை குறைத்து லாபத்தை பெருக்கலாமே.

மேற்கொண்டு டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள லிங்கை சொடுக்கி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் லிங்க் :
Click Here :
Register for Technical Analysis Training in Chennai
Click Here
Register for Basic Share Market Training

Share Market Training - Contact  91- 9841986753