Header

வீடு வாங்க/கட்ட - ஃப்ளாட் வாங்க : தேவையான ஆவணங்கள்!

வீடு வாங்க/கட்ட, ஃப்ளாட் வாங்க: தேவையான ஆவணங்கள்!



மனைப் பத்திரம்: உங்களோட மனையை சார் பதிவாளர் அலுவலகத்துல பதிவு செய்து வாங்குன பத்திரம்.

தாய்ப் பத்திரம்: இப்போ இருக்குறதுக்கும் முந்தைய மனை பத்திரம்.

வில்லங்கச் சான்றிதழ்: இன்னைய நிலைமையில மனை உங்களுக்குதான் சொந்தம்ங்குறதை உறுதிப்படுத்துற சான்றிதழ் இது. சார் பதிவாளர் அலுவலகத்துல விண்ணப்பிச்சு வாங்கணும். குறைஞ்சது 13 வருஷத்துக்கும், அதிகபட்சம் 20 வருஷத்துக்கும் இந்த வில்லங்கச் சான்றிதழை வாங்கி வைச்சுக்குறது நல்லது.

சட்டக் கருத்து (லீகல் ஒப்பீனியன்): இது வக்கீல்கிட்ட வாங்கவேண்டிய சான்றிதழ். இதை வாங்குறதுக்கு, மனை பத்திரம், ஒரிஜினல் வில்லங்கச் சான்றிதழ், தாய்பத்திரத்தோட ஜெராக்ஸ், அப்ரூவ்டு மனையா இருந்தா அதுக்கான லே-அவுட் வரைபடம்.. எல்லாத்தையும் கொடுக்கணும்.

மனை விலை மதிப்பீடு அறிக்கை: நீங்க வீடு கட்டப்போற மனையோட சந்தை மதிப்பு என்ன, அரசு வழிகாட்டி மதிப்பு எவ்வளவு, இந்த ரெண்டின் சராசரி என்ன.. இதையெல்லாம் கணக்குப் பண்ணி, அங்கீகாரம் பெற்ற இன்ஜினீயர் ஒருத்தர் கொடுக்குற ரிப்போர்ட் இது.

அங்கீகரிக்கப்பட்ட பிளான்: மாநகராட்சி/ நகராட்சி மாதிரியான உள்ளாட்சி அமைப்புகிட்ட வாங்கவேண்டிய கட்டட பிளான். கடன் வாங்கி வீடு கட்டுறதா இருந்தா முதல்லயே பிளான் போட்டு, உள்ளாட்சி அமைப்புகிட்ட அப்ரூவலுக்கு விண்ணப்பிச்சா... சீக்கிரம் வீட்டு வேலையை ஆரம்பிச்சிடலாம்.

கட்டுமானச் செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு: புதுசா வீடு கட்டுறதா இருந்தா அதுக்கான செலவு விவரங்கள்பத்தி விவரமா இன்ஜினீயர் தர்ற அறிக்கை. ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுன்னா, அதை மதிப்பிட்டு இன்ஜினீயர் தரும் ரிப்போர்ட்.

வயதுக்கான ஆதாரம்: கடனைத் திருப்பிச் செலுத்துற காலத்தை முடிவு செய்யறதுக்கு வயசு ரொம்ப முக்கியம். 10 அல்லது 12-ம் வகுப்பு மார்க் லிஸ்ட் அல்லது டி.சி-யே போதுமானதுதான். பொதுவா 21 வயசு முடிஞ்சிருந்தாதான் வீட்டுக்கடன் தருவாங்க. சில வங்கிகள் இதை 25 வயசுன்னு நிர்ணயிச்சிருக்கு. வீட்டுக்கடன் வாங்குறதுக்கான அதிகபட்ச வயசு 55.

வருமானச் சான்றிதழ்: நீங்க வேலை பார்க்கிற அலுவலகத்தோட லெட்டர் பேடுல, உங்களோட சம்பள விவரங்களை தெளிவா குறிப்பிட்டு வழங்கப்படுற சான்றிதழ். பொதுவா, ஒரு நிறு-வனத்துல மூணு வருஷத்துக்கு மேல நிரந்தரப் பணியில இருக்குறவங்களுக்குத்தான் வீட்டுக் கடன் கிடைக்கும்.

வங்கி பாஸ்புக்: கடந்த ஆறு மாச காலத்துக்கான வங்கி பாஸ்புக்கின் நகல்.

வருமான வரி செலுத்திய விவரம்: வருமான வரித் துறை வழங்குற நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டையின் நகல், வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செஞ்ச படிவத்தோட நகலையும் கொடுக்கணும். சுயதொழில் செய்யறவங்க இதை அவசியம் கொடுக்கணும்.

இருப்பிட முகவரிக்கான ஆதாரம்: குடும்ப அட்டை/ வாக்காளர் அடையாள அட்டை.. இதுல ஏதாவது ஒண்ணோட ஜெராக்ஸ்.

புகைப்படம்: மார்பளவு புகைப்படங்கள் 3- தேவைப்படும்.

இதையெல்லாம் தவிர, தேவைப்பட்டா கடனுக்கு ஜாமீன் குடுக்க யாரைச்சும் கேரன்டி கையெழுத்து போடச்சொல்லிக் கேட்க வாய்ப்பிருக்கு. வருமான வரி கட்டுற யாரும் இந்த கேரன்டி கையெழுத்துப் போடலாம். தேசிய சேமிப்பு பத்திரம், ஆயுள்காப்பீடு பத்திரம் இதையும் ஜாமீன் தொகைக்கு இணையா கொடுக்கலாம்.