Header

கோபப்படும் வாடிக்கையாளரை சமாளிப்பது எப்படி?

கோபப்படும் வாடிக்கையாளரை சமாளிப்பது எப்படி?


உங்கள் நிறுவனத்திலோ அல்லது நீங்கள் வேலை செய்யும் இடத்திலோ ஒரு வாடிக்கையாளர் ஏதோ ஒரு காரணத்துக்காக கோபப்பட்டு கடுமையாக நடந்து கொள்கிறார் என்றால் அவர்களை எப்படி சமாளிப்பது என்பது துவங்கி அவர்களது கோபத்துக்கு சரியான வழியை கூறுவது வரை அனைத்தையுமே கவனிக்க வேண்டும். இப்படிப்பட்ட வாடிக்கையாளரை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

வாடிக்கையாளர் கோபம் கொள்ள இரண்டே காரணங்கள் இருக்கதான் வாய்ப்புள்ளது அவர் வாங்கிய பொருள் அவருக்கு திருப்திகரமானதாக இல்லாமல் போய் இருக்கலாம். அல்லது நிறுவனத்திடம் அவர் கேட்ட சந்தேகத்துக்கு சரியான விளக்கம் அளிக்கப்படாமல் இருந்திருக்கலாம். இப்படிப்பட்ட சூழலில் முதலில் அவர் எந்த மாதிரியான சூழலில் உங்களை அணுகுகிறார் என்பதை பாருங்கள்.

வாடிக்கையாளர்கள் உங்களை பலவிதமாக அணுகலாம். முதலில் உங்களிடன் தன் பிரச்னை இது தான் இது உங்கள் தயாரிப்பிலோ அல்லது சேவையிலோ சரியாக இல்லை என்பதை நியாயமாக உங்களிடம் முன் வைப்பவர். இவரிடம் நீங்கள் சரியான விளக்கத்தையும், தவறு யாருடையது என்பது குறித்த விவரம், ஒருவேளை நிறுவனத்தின் தவறு என்றால் சரியான சேவையை வழங்கி அவரை சமாளிக்கலாம். சில சமயம் இது போன்ற வாடிக்கையாளர்களிடம் கடுமையாக நடந்து கொண்டால் இவர்கள் சட்ட ரீதியாக அணுகுவார்கள். அதனால் இவர்களிடம் தெளிவான விளக்கத்தை அளித்தால் அது சிறப்பானதாக இருக்கும்.

இரண்டாவது விதம் அக்ரஸிவ் வாடிக்கையாளர், இவர் எடுத்தவுடனேயே சத்தமான வார்த்தைகளுடன் தயாரிப்பு அல்லது சேவை மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே செல்வார். இவரை இதே கோபத்தில் அணுகவிட்டால் அவர் உங்களது நிறுவனத்துக்கு சற்று நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்துபவராக இருப்பார். அதனால் அவரை போன்ற வாடிக்கையாளரை அழைத்து அவர் பிரச்னை என்ன என்பதை கேட்டறிந்து அதற்கான தீர்வு எவ்வளவு சீக்கிரம் அளிக்கமுடியுமோ அதனை அளித்து அவரை சமாளிக்க வேண்டும். அவரை அதோடு விடாமல் உங்கள் சேவை குறித்த ஆய்வாக அல்லாமல் தற்போது ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பது போன்ற கேள்விகளை அவரிடம் விசாரிக்கும் போது அவர் தானாகவே உங்கள் சேவை பற்றி விளம்பரபடுத்த துவங்கிவிடுவார். அதனால் இந்த வாடிக்கையாளர்களை நிதானமாக கையாளவேண்டும்.

மூன்றாவது வாடிக்கையாளர் திருப்தியற்றவர். இவர் அவரது மனதுக்கு பொருள் திருப்தியடையும் வரை நிறுவனத்தை விடமாட்டார். தொடர்ந்து வந்து ஏதாவது ஒரு குறையை கூறுவார். இவர் போன்ற வாடிக்கையாளர்களிடம் உடனடி சேவை அது குறித்த அனுபவம் ஆகியவற்றை பெற வேண்டும். வேறு ஏதும் பிரச்னை உள்ளதா என அவருக்கு முன்னதாகவே கேள்வியை எழுப்பி உங்களது சேவையை தரும் போது அவரது மனது திருப்தியடைந்துவிடும். அப்போது உங்களிடம் அவர் கோபப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.

நான்காவது ரக வாடிக்கையாளர் நிறுவனத்தின் நிரந்தர வாடிக்கையாளர்களாக இருக்க மாட்டார். இவர் உங்கள் நிறுவனத்திடம் இருந்து பொருளுக்கு நிகரான பணத்தை எதிர்பார்ப்பவர். இவர் உங்களிடம் பணத்தை திரும்ப பெறும் மனநிலையில் தான் அணுகுவார். இவரிடம் நீங்கள் அவருக்கு தேவைப்படும் சேவை என்ன என்பதை கேட்டு அவரை திருப்திப்படுத்த முடியுமா என்று பாருங்கள். இல்லையெனில் அவருக்கு பொருளை மாற்றி வழங்கும் வசதி உள்ளது என்பதை சரியானதாக எடுத்து கூறுங்கள். அவர் நிச்சயம் சரியானதாக இருந்தால் ஏற்று கொள்வார் அதனால் இவரிடம் அதிக விவாதத்தில் ஈடுபடாமல் சரியான பொருளை திரும்ப அளித்தாலே போதும்

வாடிக்கையாளர்கள் பல விதங்களில் அணுகினாலும் நீங்கள் சமநிலையாக அவர்களை அணுகி அவர்களுக்கு சேவை வழங்கும் போது, அவர்கள் உங்களது சம்பளம் வாங்காத விளம்பர ஏஜென்ட்டாக மாறிவிடுவார்கள். அதனால் கோபமாக வரும் வாடிக்கையாளரையும் சரியாக அணுகினால் உங்கள் நிறுவனம் வாடிக்கையாளர் திருப்தி பெற்ற நிறுவனமாக இருக்கும்.

Click Here :
Register for Technical Analysis Training in Chennai
Click Here
Register for Basic Share Market Training

Share Market Training - Contact  91- 9841986753