Header

கொட்டகையில் துவங்கி கோடீஸ்வரர் ஆன ‘எம்ஆர்எப்’ கே எம் மாமென் மாப்பிள்ளை:

கொட்டகையில் துவங்கி கோடீஸ்வரர் ஆன ‘எம்ஆர்எப்’ கே எம் மாமென் மாப்பிள்ளை:


 வெற்றி ரகசியம் கொட்டகையில் துவங்கி கோடீஸ்வரர் ஆன ‘எம்ஆர்எப்’ கே எம் மாமென் மாப்பிள்ளை: வெற்றி ரகசியம்

உலகில் வளர்ந்து வரும் மற்ற நாடுகளைப் போன்று இந்தியாவில் எஃகு, சிமெண்ட், கனரகப் போக்குவரத்து மற்றும் டயர்கள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தொழில்கள் வளர்ச்சியடைய முக்கியக் காரணமாக இந்திய தொழிலதிபர்கள் இருந்தனர். வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து எவ்வித பாதுகாப்பும் இல்லாத காலத்திலேயே, அதாவது சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலத்திலேயே இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் பல்துறை வியாபாரங்களைத் துவங்கி அவற்றை வெற்றிப் பாதையில் இயக்கினர். அவ்வாறான தொழிலதிபர்களில் ஒருவர் தான் கே. எம். மாமென் மாப்பிள்ளை. உண்மையில் எம்ஆர்எப் கே.எம் மாமென் மாப்பிள்ளையின் கனவு திட்டமாக இருந்து இத்தகைய பிரபலம் அடைந்துள்ளது.

கே.எம் மாமென் மாப்பிள்ளை எவ்வாறு தொழில் முனைவோரானார்? அவரது தந்தை வங்கி மற்றும் செய்தித்தாள் நிறுவனங்களைச் சொந்தமாக வைத்திருந்தார். டிரிவான்கோர் சமஸ்தானம் இவருக்கு இரண்டு ஆண்டுச் சிறை தண்டனை விதித்து அவரது குடும்பச் சொத்துக்களைப் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது குடும்பம் அனைத்தும் இழந்தது. இதனால் தன் தந்தை கைது செய்யப்பட்டது முதல் செயின்ட் தாமஸ் கல்லூரியின் ஹாலில் உறங்கத் தொடங்கினார்..


பலூன் பொம்மை உற்பத்தி


பலூன் பொம்மை உற்பத்தி தன் பட்டப்படிப்பை முடிந்த பிறகு, கே.எம் தன் மனைவி குஞ்சம்மாவுடன் இணைந்து, சிறிய பலூன் பொம்மைகளை உற்பத்தி செய்யத் துவங்கினர். சிறிய கொட்டகையில் பலூன் பொம்மைகளைச் செய்து, கே.எம் அவற்றை ஒரு பையில் எடுத்துச் சென்று தெருக்களில் வைத்து அவற்றை விற்பனை செய்தார். வாடிக்கையாளர்களிடம் வித்தியாசமான எளிய அணுகு முறை அவரின் வெற்றிக்கு வித்திட்டது. நீண்ட காலம் ஒரே தொழில் செய்த பின் வியாபாரத்தைக் கே.எம் முன்நோக்கி அழைத்துச் செல்ல முடிவு செய்தார்

டயர் வியாபாரம்

டயர் வியாபாரம் அவரது உறவினர்களில் ஒருவர் டயர் சார்ந்த வியாபாரம் செய்து வந்தார். அவருக்குத் தேவையான ரப்பர் பொருட்களை வெளிநாட்டு டயர் நிறுவனங்கள் வழங்கி வந்தன. ஸ்டீல் மற்றும் உணவகங்கள் துறையில் ஜாம்ஷெட்ஜீ டாட்டா செய்ததைக் கே.எம். செய்ய நினைத்தார்.

டிரீட் ரப்பர்


டிரீட் ரப்பர் சந்தையில் நல்ல முறையில் லாபத்தை ஈட்ட நினைத்த கே.எம். டிரீட் ரப்பர் தயாரிக்க முடிவு செய்தார். ஏற்கனவே பயன்படுத்திய டயர்களின் வாழ்நாளை அதிகரிக்கும் டிரீட் ரப்பர் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

எம்ஆர்எப்



எம்ஆர்எப் மிக விரைவில் டிரீட் ரப்பர்களை உருவாகிற ஒரே இந்திய நிறுவனமாக எம்ஆர்எப் உருவெடுத்தது. இதனால் எம்.ஆர்.எப். பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் போட்டியிட்டது. தரமான பொருட்களை வழங்கி எம்.ஆர்.எப் சந்தையில் 50% பங்குகளுடன் முன்னணி இடத்தைப் பிடித்தது.

போட்டி எம்.ஆர்.எ போட்டி காரணமாகப் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் தங்களது வியாபாரத்தைக் கைவிட்டன. சீரான வளர்ச்சிக்குப் பின் மீண்டும் வியாபாரத்தை விரிவுபடுத்த கே.எம் முடிவு செய்தார். இம்முறை அவர் டயர் தயாரிப்பில் கவனம் செலுத்தினார்.

வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அந்தக் காலத்தில் இந்திய ஆட்டோமொபைல் டயர் சந்தையில் டன்லப், ஃபயர்ஸ்டோன் மற்றும் குட் இயர் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

பங்குச் சந்தையில் முதலீடு இவரது டயர் தயாரிப்பு ஆலையை 1961-இல் பிரதமராக இருந்த பண்டிட் நேரு துவங்கி வைத்தார். அதே ஆண்டில் இந்நிறுவனம் ஐபிஒ ஒன்றை வெளியிட்டு பங்கு சந்தையில் வெற்றிப் பெற்றது.

வியாபாரம் சரிவு கே.எம். கூட்டு சேர்ந்த அமெரிக்க நிறுவனத்தின் தொழில்நுட்பம் இந்திய சாலைகளுக்கு ஏற்றதாக அமையவில்லை. இதனால் பொருட்கள் வியாபாரம் சரிவடையத் துவங்கியது, இதை வைத்து இந்திய நிறுவனங்களால் டயர்களைத் தயாரிக்க முடியாது என்ற வாக்கில் வெளிநாட்டு நிறுவனங்கள் வதந்திகளைப் பரப்பின.

மத்திய அரசு உதவி எம்.ஆர்.எப் நிலைமை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து விஷயத்தை அரசு அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல எம்ஆர்எப் முடிவு செய்தது. நிலைமையை உணர்ந்த இந்திய அரசு விதிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இது எம்ஆர்எ போன்ற நிறுவனங்கள் போட்டியிட மறு வாய்ப்பாக அமைந்தது. போட்டியிட போதுமான இடம் கிடைத்ததைத் தொடர்ந்து எம்ஆர்எப் சந்தையில் தனது பங்குகளை அதிகரித்து விளம்பரங்களில் அதிகக் கவனம் செலுத்தியது

விளம்பரம் - அலிக்யூ பத்மஸ்ரீ கே.எம். பிறப்பில் ஓவியர் மற்றும் விளம்பரம் செய்வதில் திறன் கொண்டிருந்தார். தனது பலத்தைச் சரியாகப் பயன்படுத்திப் பல்வேறு விளம்பர நிறுவனங்களை அணுகியது. இறுதியில் இதற்கான வாய்ப்பு அலிக்யூ பத்மஸ்ரீக்கு வழங்கப்பட்டது.

விளம்பர துறையின் தந்தை அலிக்யூ இந்திய விளம்பர துறையின் தந்தையாக அறியப்பட்டார். இதன்பின் 1964-இல் MRF Muscleman பிறந்தது. மசுல்மேன் என்ற வார்த்தை எம்.ஆர்.எப் உருவாக்கிய டயர்களின் உறுதித் தன்மையை விளக்கியது. போட்டியாளர்களை நண்பர்களாக்கும் வித்தை அவருக்குத் தெரிந்திருந்தது. வித்தியாசமான கதைகள் மற்றும் தந்திரங்களைக் கொண்டு மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தி வந்தார்.

முன்னணி நிறுவனங்களின் வீழ்ச்சி தனது விடா முயற்சியால் டன்லப் மற்றும் ஃபயர்ஸ்டோன் நிறுவனங்கள் மட்டுமின்றி உலகின் முன்னணி வெளிநாட்டு பிறாண்டாக விளங்கிய மிக்கலின் நிறுவனத்தையும் வீழ்த்தினார்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இந்திய சந்தையில் தற்போது 24% பங்குகளையும், சர்வதேச அளவில் 12% பங்குகளையும் கொண்டு, எம்.ஆர்.எப் 65க்கும் அதிகமான நாடுகளுக்குத் தனது பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

உலகின் மிகப்பெரிய டயர் நிறுவனம் அன்று சிறிய அளவிலான கொட்டகையில் துவங்கி இன்று உலகின் மிகப்பெரிய டயர் நிறுவனங்கள் பட்டியலில் 15-வது இடத்தில் உள்ளது. இதோடு 2015-இல் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சர்வதேச ஒப்பந்ததாரராகும் வகையில் வளர்ச்சி பெற்றுள்ளது.