Header

பர்சனல் லோன் (Personal Loan) இந்த காரணங்களுக்கு கெல்லாம் வாங்கவே கூடாது

பர்சனல் லோன் (Personal Loan) இந்த காரணங்களுக்கு கெல்லாம் வாங்கவே கூடாது
Avoid-Personal-loans-For-these-reasons


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
  

மருத்துவச் செலவு, திருமணச் செலவுகள் போன்றவற்றுக்குப் பணம் தேவை எனும் போது மிகுந்த பயன் அளிப்பது தனிநபர் கடன் ஆகும். ஆனால் இதற்கு வட்டி விகிதமும் 10 முதல் 13 சதவீதம் என்பது மிகவும் அதிகம் என்றாலும் தேவைப்படும் போது பயன்படுத்தலாம். எப்படி இருந்தாலும் பின் வரும் காரணங்களுக்காக எல்லாம் தனிநபர் கடனைத் தவிர்ப்பது நல்லது ஆகும்.

கடனாகப் பெற்ற பணத்தை முதலீடு செய்யாதீர்கள் தனிநபர் திட்டம் கீழ் கடனாகப் பெற்ற பணத்தினைப் பங்கு சந்தை அல்லது பிற ரிஸ்க் முதலீடுகளைச் செய்யாதீர்கள். இது போன்ற ரிஸ்க்கான திட்டங்கள் லாபம் அளிக்காமல் முதலீடு செய்ததை விடக் குறைவான மதிப்பிற்குச் செல்லவும் வாய்ப்புகள் உள்ளது.

வாகனம் வாங்க அல்லது இது போன்ற பிறவற்றுக்குத் தனிநபர் கடன் வாங்க வேண்டாம் தனிநபர் கடன் எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல் அளிக்கப்படுவதால் வட்டி விகிதம் கூடுதலாக இருக்கும். சொந்தமாகப் பிஸ்னஸ் துவங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க எல்லாம் தனிநபர் கடனை விடக் குறைவான வட்டி விகிதத்தில் கடன் பெற முடியும்.

விருப்ப செலவுகளுக்காகக் கடன் வாங்காதீர்கள் உங்களுக்கு விருப்பானவற்றை வாங்க வேண்டும் என்பதற்காகவும் தனிநபர் கடன் வாங்க வேண்டாம். இன்றைய சூழலில் பல நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் என்பதற்காகச் செலவில்லாத ஈஎம்ஐ சேவைகளை எல்லாம் வழங்குகின்றன

பிறருக்காக உங்கள் பெயரில் கடன் வாங்க வேண்டாம் பிறரின் தேவைக்காகக் கடன் பெற்று அளித்து விட்டு அவர்கள் சரியான நேரத்தில் உங்களுக்குப் பணத்தினைத் திருப்பி அளிக்கவில்லை என்றால் அதனால் உங்களுக்கு மிகப் பெரிய சிரமம் ஏற்படும். அதுமட்டும் இல்லாமல் நீங்கள் சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் போது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படுவது மட்டும் இல்லாமல் வேறு எந்தக் கடனும் வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

பிஸ்னஸ் துவங்க தனிநபர் கடன் பெற வேண்டாம் தனிநபர் கடனை தவிர்த்துப் பிஸ்னஸ் துவங்க அரசு பல வகையில் கடன் அளித்து உதவி செய்கிறது. புதியதாகத் துவங்கும் ஒரு தொழிலில் உடனே வருவாய் பெற்றுக் கடனை திருப்பிச் செலுத்திவிடலாம் என்பதும் முடியாத காரியம் ஆகும். எனவே தனிநபர் கடன் என்பது அவசர தேவையின் போது உங்களுக்காகப் பெற மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவும்.