Header

ஒரு சிறந்த தலைவனுக்கு கண்டிப்பாக 'இது' இருக்க வேண்டும்

ஒரு சிறந்த தலைவனுக்கு கண்டிப்பாக 'இது' இருக்க வேண்டும்
five-ways-be-more-humble-leader

   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

நாட்டில் நல்ல தலைவர்களுக்கு பஞ்சம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது, இந்த நிலை அரசியல் தளத்தில் மட்டுமல்ல நாம் பணிபுரியும் நிறுவனங்களிலும் கூட இதே நிலை தான். ஆகவே ஒரு நிறுவனத்தில் நல்ல தலைவனாக இருக்கத் தேவையான அதிமுக்கியமானவற்றையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

பணிவின் பலன்கள் பணிவு என்பது ஒரு சிலருக்கு இயற்கையாகவே இருக்கும். மற்றவர்கள் சிறந்த தலைவராக வரவேண்டும் எனில் பணிவை வரவழைத்துக்கொள்ள வேண்டும். எப்படி நல்ல பணிவான தலைவராக இருந்து தமக்கு கீழே பணியாற்றுபவர்களின் உண்மையான திறமையை வெளிக்கொணர உதவும்.

எல்லைகளை உணர்தல் தலைவரோ இல்லையோ, யாராக இருந்தாலும் அனைத்தையும் தெரிந்துகொள்வது என்பது சாத்தியமில்லை. இதை ஒத்துக்கொள்வது தான் பணிவைக் கற்க முக்கிய அம்சம். எப்போதும் மற்றவர்களின் கருத்துக்களை கேட்பது, தேவைப்படும் போது அவர்களிடம் ஆலோசனைகள் கேட்பது மிகவும் அவசியம். இதன் மூலம் உங்களின் பார்வை குறுகியதாக இருக்கும் பட்சத்தில் பல்வேறு கோணங்களில் கருத்துக்கள் கிடைக்கும் போது சிறப்பான ஒன்றாக இருக்கும். இது தான் உங்கள் நிறுவனத்தை முன்நோக்கி செலுத்த முக்கியமான ஒன்று.

கற்க எப்போதும் தயாராக இருத்தல் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் எதையாவதை கற்க வேண்டியவை இருக்கும். உங்களின் சக பணியாளர்களிடம் மட்டுமில்லாமல், காவலாளிகள், தேநீர் கொண்டு வரும் நபர் என அனைத்து மட்டத்திலும் உள்ள பணியாளர்களிடம் இருந்து கற்க முடியும். கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்

கூட்டுமுயற்சியே பிரதானம் அதிகாரம் செலுத்தும் தலைவனாக இல்லாமல் ஊக்கமளிக்கும் தலைவனாக இருக்க முயலுங்கள். உங்கள் குழுவுடன் நெருங்கிப் பணியாற்றுவதன் மூலமும், ஒவ்வொரு நபரையும் பாதிக்கும் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதன் மூலமும் இதனைச் செய்யமுடியும். மக்களை மையப்படுத்திய தலைவனாக இருக்கும் பட்சத்தில் பணிவு தானாகவே வந்துவிடும். ஏனெனில் மற்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதில் இருந்து நீங்கள் கற்கிறீர்கள்.

விமர்சனங்களுக்கு மதிப்பளித்தல் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், ஒரு தலைவனாகவும் நீங்கள் திறந்த மனதுடன் விமர்சனங்களை வரவேற்ற வேண்டும். பெரும்பாலானோர் தங்களை சுற்றி தாங்களே சுவர் அமைத்துக்கொண்டு, பிறர் அணுகுவதைத் தடுக்கின்றனர். நீங்கள் செயல்படுகிறீர்கள் என்பதை ஒப்புக்கொள்ள முடிந்தால் மட்டுமே , உங்களால் வளரமுடியும் மற்றும் உங்களைச் சுற்றி இருப்பவர்களும் உங்களைப் பாராட்டுவார்கள்.

சிறப்பாகக் கவனித்தல் மற்றவர்கள் பேசும் போது அதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இது அவர்களைப் புரிந்துகொள்வதற்கு மட்டும் உதவாமல், அவர்கள் உங்கள் மீது எவ்வளவு மதிப்பு வைத்துள்ளனர் என்பதையும் காட்டும். பணிவு தான் சிறப்பான உரையாடலுக்கான தூண் - எனவே நம்மிடம் பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்