Header

இந்த படங்களை( Films) பார்த்தும் பங்கு சந்தையினைக் கற்றுக்கொள்ளலாம்

இந்த படங்களை( Films )பார்த்தும் பங்கு சந்தையினைக் கற்றுக்கொள்ளலாம்
Movies-watch-learn-trading



தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
       
ஒரு சிறந்த திரைப்படம் பார்வையாளனுக்குப் பல நல்ல விசயங்களைக் கற்றுக் கொடுக்கும். திரைப்படம் என்னும் சமூக ஊடகம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகப் பின்னிப் பிணைந்துள்ளது. திரைப்படங்கள் சமூகத்தின் மீது மிகப் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. பிற ஊடகத்தைக் காட்டிலும் திரைப்படங்கள் வழியாக ஒரு கருத்தை மக்களிடம் மிக எளிதாகப் பரப்ப முடியும்.

புத்தகங்கள் வழியாகக் கற்றுக் கொள்வதைக் காட்டிலும் திரைப்படங்கள் போன்ற காட்சி ஊடகங்கள் வழியாக எந்த விசயத்தையும், எப்படிப்பட்ட பாடங்களையும் மிக எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

பங்கு வணிகத்தைக் கற்றுக் கொள்வதற்கு ஏற்றத் திரைப்படங்கள் குறித்து இங்குக் காண்போம்.

பங்கு வணிகமும் ஹாலிவுட் திரைப்படங்களும் பங்கு வணிகம் என்பது பல்வேறு வகையான நடைமுறைகளை உள்ளடக்கியது. அதனுடைய சூட்சுமங்களை முழுமையாகக் கற்றுக் கொள்ள நீண்ட நாட்கள் ஆகும். ஆனால், திரைப்படத்தின் குறுகிய காலத்தில், பங்கு வணிகம் தொடர்பான சிக்கலான நடைமுறைகளை எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். திரைப்படங்கள், உணர்வுக்கும் அறிவுக்கும் ஏற்றச் சிறந்த காட்சி ஊடகம் ஆகும். பார்வையாளர்களின் அறிவுத் திறனையும் உணர்வு நிலையையும் ஒரே சமயத்தில் தூண்டிவிடும் திறன் பெற்றவை. நடைமுறை வாழ்க்கையோடு இணைந்த பயன்பாட்டு அறிவைப் பார்ப்பவர்களின் மனதில் புகுத்துவதற்குத் திரைப்படங்கள் ஏற்றச் சாதனங்கள் ஆகும். பங்கு வணிகம் தொடர்பான நடைமுறை அறிவைப் புகட்டுவதற்கு ஏற்ற சில திரைப்படங்கள் குறித்து இங்குக் காண்போம்.

வால் ஸ்ட்ரீட், 1987 ஆலிவர் ஸ்டோனால் இயக்கப்பட்ட "Wall Street" திரைப்படம் 1987 ஆம் ஆண்டு வெளிவந்தது. நிதித் துறையில் பணியாற்றுகின்ற ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம். பங்கு வணிகத்தில் உச்சத்தைத் தொட நினைக்கும் ஒரு இளைஞரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். தன்னுடைய பங்கு வர்த்தகக் குருவாக ஒரு தவறான நபரைப் பின்பற்றுவதால் அவனுடைய கனவுகள் சீரழிவதை இந்தப் படம் விளக்குகிறது. Gorden Gekko என்னும் நபர் மிகவும் பேராசை பிடித்தவர். லாபம் ஒன்றை மட்டுமே மனதில் வைத்து, வர்த்தக நடைமுறைகளை மதிக்காமல் செயல்படுபவர். இவன் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தை "பேராசை நல்லது ( Greed is Good)". இந்தப் படம் பங்கு வர்த்தகத்தில் உள்ள முறையற்ற நடைமுறைகளை விளக்குகிறது. பங்கு வர்த்தகம் மூலம் நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றால் சரியான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும், Gorden Gekko போன்ற மோசடி ஹீரோக்களைப் பின்பற்றக் கூடாது என்னும் கருத்தை இப்படம் பார்ப்பவர்களின் மனதில் ஆழமாகப் பதிய வைக்கிறது.

இன்சைட் ஜாப், 2010 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கர் விருதை (Academy Award) இந்தப் படம் பெற்றது. 2008 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பொருளாதார நெருக்கடியை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது. பங்குச் சந்தையில் நிகழும் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் உலகத்தைப் பொருளாதார நெருக்கடி நிலைக்கு அழைத்துச் சென்ற நிலையை இப்படம் எடுத்தியம்புகிறது. பேராசையுடன் செயல்பட்ட வங்கிகளின் உயரதிகாரிகளின் செயலால் வங்கிகள் திவாலாயின. உயரதிகாரிகள் தங்களுடைய பெரும் செல்வத்துடன் ஓட்டம் பிடித்தனர். நிதித் துறையில் இயங்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரிஸ்க் எடுக்கக் கூடாது என்பதை இப்படம் போதிக்கிறது. வங்கித் துறையைச் சேர்ந்தவர்கள், நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், பொருளாதார வல்லுநர்கள், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் போன்றோரிடம் எடுத்து நேர்காணல்களும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன.

ஃப்ரீகோனாமிக்ஸ், 2010 இது ஒரு திரைப்படம் அல்ல. தொலைக்காட்சித் தொடர். ரியல் எஸ்டேட் துறையில் பங்குகளை வாங்கி விற்பது எவ்வாறு என்பது தொடர்பான தகவல்களை இத் தொடர் "அ" முதல் "ஃ" வரையில் விரிவாக விளக்குகிறது. ரியல் எஸ்டேட் துறை எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் இத்தொடரில் விவரிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இப்படத்தைக் கட்டாயம் பார்க்க வேண்டும். வணிக நடைமுறைகள் குறித்த ஆழமான பொருளாதாரச் சிந்தனைகளை இத்தொடர் விதைக்கிறது.

மார்ஜின் கால், 2011 அமெரிக்காவின் பங்கு வர்த்தக மையமான வால் ஸ்டிரீட்டில் நிகழக் கூடிய பேரழிவினை 24 மணி நேரக் கதைக் களத்துடன் விவரிக்கிறது இப்படம். பெயர் குறிப்பிடப்படாத ஒரு முதலீட்டு வங்கியைச் சேர்ந்த குழுவினரை மையமாகக் கொண்டு இப்படம் இயங்குகிறது. 2008 ஆம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையை இப்படம் தொடர்பு படுத்துகிறது. அனுபவம் இல்லாத நிலையில் உள்ள ஒரு நிதியாளர் வெளிப்படுத்தும் தகவல்களால் அவர் சார்ந்துள்ள நிறுவனம் மிகப் பெரும் வீழ்ச்சியைச் சந்திப்பதை மிகுந்த பரபரப்புடன் விவரிக்கிறது இப்படம். இப்படத்தில் இடம் பெறும் முக்கியப் பாத்திரங்கள் முன் யோசனையில்லாமல் சில சிக்கலான பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். வணிகம் தொடர்பான அடிப்படையான அறிவு கூட இல்லாத இவர்கள், ஒரு நிறுவனத்தை மேலாண்மை செய்வது குறித்து விவாதிக்கும் காட்சிகளும் படத்தில் இடம் பெற்றுள்ளன. இக்காட்சிகள், பார்ப்பவர்களுக்கு நிதி மற்றும் வணிகம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

தி பிக் ஷார்ட், 2015 2015 ஆம் ஆண்டு வெளிவந்த "The Big Short" திரைப்படம் உலகின் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி நிலை குறித்து விவரிக்கும் மிகச்சிறந்த திரைப்படம் ஆகும். 2008 ஆம் ஆண்டில் பங்கு வர்த்தகம் சந்தித்த மிகப்பெரும் வீழ்ச்சிக்கான காரணத்தை அழகாக இப்படம் விவரிக்கிறது. இந்நெருக்கடியால், ஏறக்குறைய எண்பது இலட்சம் மக்கள் தங்குள் வீடுகளையும், வேலையையும் இழந்தனர். மற்றவர்கள் நீண்ட கால வர்த்தகத்தில் ஈடுபட்ட நிலையில் இவர்கள் குறுகிய கால வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இது, சந்தை வீழ்ச்சியைச் சந்தித்த போது முதலீட்டாளர்களுக்குப் பெரும் இலாபத்தைக் கொடுத்தது. நிதிசார் நிறுவனங்கள் நிலை குழைந்த பொழுது அவர்களுடைய செயல்பாடு சரியென உணர்ந்தனர். இது அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இப்படம் முழுவதும் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ள நிதியியல் சார்ந்த கருத்துக்கள், படம் பார்ப்பவர்களுக்கு, வணிக உலகத்தில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்னும் உண்மையை விவரிக்கும் வகையில் உள்ளன. மொத்தத்தில், The Big Short திரைப்படம், உலகப் பொருளாதாரம் குறித்த அறிவினைப் பார்ப்பவர்களுக்கு வழங்குகிறது.

இது போன்ற மேலும் சில படங்கள் மேற்கண்ட அனைத்துத் திரைப்படங்களும் வணிகம் மற்றும் நிதிசார் உலகம் குறித்த விழிப்புணர்வினைப் பார்வையாளர்களுக்குக் கொடுக்கின்றன. பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் மற்றும் இத்துறையோடு நெருக்கமாக இயங்குபவர்கள் மேற்கண்ட திரைப்படங்களைப் பார்த்தால் மேலும் தெளிவு பெறலாம். மேற்கண்ட திரைப்படங்கள் மட்டும் அல்லாமல், Rogue Trader, Trading Places, Billion Dollar Day போன்ற படங்களும் கட்டாயம் பார்க்க வேண்டியவை. இத்திரைப்படங்கள் பங்கு வணிகம் தொடர்பான நம்முடைய அறிவை மேலும் விரிவடையச் செய்யும்.