Header

குழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்குவது எப்படி?

குழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்குவது எப்படி?
how-open-bank-account-kids


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பதினெட்டு வயதுக்கும் குறைவானவர்களுக்காக "மைனர் வங்கிக் கணக்கு ("minor account") வசதியை வங்கிகள் வழங்குகின்றன. இக் கணக்கின் மூலம், மிகக் குறைந்த வயதிலேயே சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள இயலும். கல்விக்கான காப்பீடு, நிலையான வைப்பீடு, மற்றும் அதிகமான வட்டி விகிதம் எனப் பல சிறப்பு அம்சங்களைக் குழந்தைகளுக்கான வங்கிக் கணக்குகள் கொண்டுள்ளன. உங்களுடைய குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்குத் தொடங்குவதன் மூலம் அவர்களுக்குப் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த முடியும்.

வங்கிக் கணக்குத் தொடங்க தேவையானவை பதினெட்டு வயது நிரம்பாத சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலமாக இவ்வகையான கணக்குகளைத் தொடங்கு முடியும். குழந்தைகளுக்குக் கூட இவ்வகையான கணக்குகளைத் தொடங்கலாம். ஒரே வங்கியில் கணக்குத் தொடங்கலாம் : பெற்றோருக்குக் கணக்கு உள்ள வங்கிகளில் அவர்களுடைய குழந்தைகளுக்கும் வங்கிக் கணக்குத் தொடங்குவதைத் தான் பெரும்பாலான வங்கிகள் விரும்புகின்றன.

முகவரிக்கு ஆதாரம் ஆதார் அட்டை உட்பட அரசு வழங்கிய ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் குழந்தைக்கும் பெற்றோருக்கும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்

கையெழுத்து மாதிரி குழந்தையின் கையெழுத்து மாதிரி (பத்து வயதுக்கு மேற்பட்டு இருந்தால்) மற்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கையெழுத்து மாதிரியைச் சமர்ப்பிக்க வேண்டும்

சிறப்பு அம்சங்கள் குழந்தைகளுக்கான வங்கிக் கணக்குகள் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. இது வங்கிகளுக்கு வங்கி மாறுபடும்.

தேவையான குறைந்தபட்ச இருப்பு உதாரணமாக, எச்டிஎப்சி வங்கி, மைனர் வங்கிக் கணக்குக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையாக 5000 ரூபாய் என நிர்ணயித்துள்ளது.

வட்டி விகிதம் பொதுவாகச் சிறுவர்களுக்கான வங்கிக் கணக்குகளுக்கு அதிகமான வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படும். சில வங்கிகள் பெற்றோருடன் சேர்ந்த கூட்டு வங்கிக் கணக்கு தொடங்கவும் அனுமதிக்கின்றன.

டெபிட் கார்டு வசதி கோடக் மஹிந்திரா போன்ற வங்கிகள், ஜீனியர் சேமிப்புக் கணக்குகளுக்கு, ஒரு நாளைக்கு 5000 ரூபாய் வரை பணம் எடுக்கும் வசதியுடன் கூடிய டெபிட் கார்டுகளை வழங்குகின்றன

சுழல் வைப்புநிதி வசதி பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை நிலை வைப்பாகக் குழந்தைகளின் கணக்கிற்கு மாற்றப்படும்.

நிலையான வைப்புத் தொகை உதாரணமாக HDFC வங்கி சிறுவர் வங்கிக் கணக்குகளில் 25,000 ரூபாய்க்கு அதிகமான எந்தத் தொகையையும் நிலை வைப்புநிதியாக வைத்துக் கொள்ளும். குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு, இத்தொகை மிக அதிக வட்டியுடன் திருப்பி அளிக்கப்படும்

கல்விக்கான காப்பீடு முக்கியமான வங்கிகள், சிறுவர் வங்கிக் கணக்குகளுக்குக் கல்விக் காப்பீடு வசதியையும் வழங்குகின்றன. ஒரு வேளை குழந்தைகளின் காப்பாளர் இறந்துவிட்டால் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு இது உதவும். காசோலைகள், இணைய வங்கிச் சேவை போன்ற பிற வசதிகளும் இவ்வங்கிக் கணக்கிற்கு வழங்கப்படுகின்றன. பெரும்பாலான வங்கிகள், குழந்தைகளுக்கு 10 வயது நிரம்பியவுடன்தான் அவர்களை வங்கிக் கணக்குகளை இயக்க அனுமதிக்கின்றன.

கவனத்தில் கொள்ள வேண்டியவை குழந்தைகளுக்குப் பதினெட்டு வயது ஆனவுடன் அவர்களுடைய வங்கிக் கணக்கு வழக்கமான சேமிப்புக் கணக்காக மாற்றப்படும். இக்கணக்கை இயக்குகின்ற உரிமை காப்பாளர்களுக்கு மறுக்கப்படும். மேலும், தேவையான தகவல்கள் பெறப்பட்டு இந்த வங்கிக் கணக்குப் பதினெட்டு வயது நிரம்பியவரின் பெயரில் முழுமையான கணக்காக மாற்றப்படும். குழந்தை வங்கிக் கணக்குகளின் பரிமாற்றங்களுக்கு வங்கிகள் சில குறிப்பிட்ட வரையறைகளை விதித்திருந்தாலும், இக்கணக்கிலிருந்து காப்பாளர்கள் அதிகப்படியாகப் பணம் எடுப்பதற்கும், மேலும் சில பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்கும் வங்கிகள் அனுமதி வழங்கும்.