Header

ஃப்ரீலான்ஸர்கள் எப்படித் தங்கள் நிதி நிலையை நிர்வாகம் செய்ய வேண்டும்

 ஃப்ரீலான்ஸர்கள் (Freelancer) எப்படித் தங்கள் நிதி நிலையை நிர்வாகம் செய்ய வேண்டும்


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


சுந்தர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு ஃப்ரீலான்ஸ் க்ரியேடிவ் டிசைனராகப் பணி புரிந்து வருகிறார். சுய தொழில் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடைய வேலையைக் கைவிட்டார். அவருடைய இந்தச் சுய தொழிலில், வேலை அவருக்குப் பிடித்திருந்தாலும், ஒழுங்கற்ற பண வரவு, அவருடைய பண மேலாண்மையைப் பாதித்தது.

ஒவ்வொரு முறையும் அவருக்குப் பண வரவு இருக்கும்போது அதனை அவர் செலவழித்துக் கொண்டிருந்தார். அவர் தனக்குக் கிடைக்கும் பணத்தைச் சேமிக்கக் வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் அவரால் ஒரு குறைந்த அளவு பணத்தை மட்டுமே சேமிக்க முடிந்தது. அவருடைய நிதி நிலைமையைச் சரியான பாதையில் கொண்டு வர அவர் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளவும் இக்காலகட்டத்தில் விரும்பினார். சுந்தர் தனக்கு வழக்கமான வருமானம் கிடைத்தவுடன் தொடக்க நிலையில் இருக்கும் தன்னைப் போன்றவர்களுக்கு இதே நிலை இருக்கும் என்பதை உணர்ந்தார். ஆகவே ஃப்ரீலான்ஸ் எனப்படும் சுய தொழில் செய்பவர்கள் நிதி நிலையை மேம்படுத்த சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதில் முதல் படியாகத் தனது ஆண்டு வருமானத்தை மதிப்பிட வேண்டும். சுய தொழிலில் வருமானம் ஒழுங்கற்றதாக இருப்பதால், தான் எதிர்பார்க்கும் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாத சம்பளத்தைத் தானே தயாரிக்க முடிவு செய்ய வேண்டும் . ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சம்பளமாகச் செலுத்த வேண்டும். சாத்தியமான வருவாயில் ஒரு குறைந்தபட்ச மதிப்பீடு செய்வது சிறந்தது. இல்லையெனில் தேவையானதை விடக் குறைந்த அளவு பணத்தைச் செலுத்த வேண்டிய நிலை உருவாகும். அடிப்படை வருமானத்தை ஏற்படுத்தியவுடன் செலவினங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். இது உங்களின் வருமானத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். உங்களின் செலவீனங்களை முக்கியத்துவத்தின் அடிப்படையில் முறைப்படுத்த வேண்டும். அனைத்துக் கட்டாய மற்றும் அத்தியாவசிய வாழ்க்கை செலவுகளை முன்னிலைப் படுத்த வேண்டும். உங்கள் தொழில் உறுதியாக நிலைக்கும்வரை, வாழ்க்கை முறை செலவீனங்களைக் குறைப்பது நல்லது. ஆரோக்கியம், ஆயுள் காப்பீடு, மற்றும் வரிப் பொறுப்புகள் போன்றவற்றிற்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஏனெனில் இவை அனைத்தும் ஒருவரின் பொருளாதாரச் சூழ்நிலையைத் தடம் புரள வைக்கும். இதற்கிடையில் ஒரு அவசர நிதி உற்பத்தி செய்வது அவசியமாகும். வருவாய்க்கும் செலவுக்கும் இடையில் எதிர்பாராத இடைவெளி ஏற்படும் போது இந்த அவசர நிதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இடைவெளியைக் குறைக்க இந்த அவசர நிதி உங்களுக்கு உதவும். வருமானம் அதிகப்படியாக வரும்போது, ஏற்கனவே பயன்படுத்திய அவசர நிதியை மறுபடியும் விரைந்து நிரப்ப வேண்டும்.

சுய தொழில் செய்பவர்கள் எந்த ஒரு கட்டாய ஊழியர் சேமிப்பு திட்டத்திலும் இணைக்கப்படாததால், தனது வருமானத்தில் ஒரு பங்கை சேமித்து வைக்க முயற்சிக்க வேண்டும். சம்பளத்திற்கு மேல் அதிகரித்த வருவாய் கிடைக்கும்போது வீண் செலவுகளைச் செய்யாமல் முதலீடுகளை உருவாக்க வேண்டும்.