வங்கி லாக்கர்(Bank Locker) கணக்கை திறக்கும் முன்னர்க் கவனிக்கவேண்டிய 5 விஷயங்கள்
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
இன்றைய சூழலில், நாம் அனைவரும் வேலைக்காக ஒரு புதிய நகரத்திற்குச் செல்கின்றோம். அல்லது, அடிக்கடி, பல்வேறு நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்கின்றோம். ஒரு சில அதிர்ஷ்டசாலி நபர்களுக்கு மட்டுமே தான் பிறந்த ஊரில் வாழும் வாழ்க்கை அமைகின்றது. அவ்வாறு சொந்த ஊரில் தங்கும் நபர்களின் குடும்பமும் தனிக் குடும்பம் அல்லது மிகச் சிறிய குடும்பமாக அமைந்து விடுகின்றது. எனவே பெரும்பாலனான நபர்கள், தங்களுடைய விலை மதிப்பற்ற ஆபரணங்கள், மற்றும் பொருட்களைப் பாதுகாப்பதில் மிகவும் சிரமப்படுகின்றனர். வீட்டில் வயதான பெற்றோர் இருக்கும் இல்லங்களில், இந்த விலை உயர்ந்த பொருட்களே அவர்களுக்கு ஆபத்தாக மாறி விடும் சூழலும் இன்று நிலவுகின்றது. அதிலும் புதிதாகத் திருமணமான நபர்கள் படும் அவஸ்தைகளை நம்முடைய வார்த்தைகளினால் விவரிக்க இயலாது. மணப்பெண் கொண்டு வந்த விலை மதிப்பு மிக்க நகைகள் மற்றும் பல்வேறு பொருட்களைப் பாதுகாப்பது நிச்சயம் மிகவும் கடினமான செயல்தான். ஒரு சிலர் மிகுந்த மன தைரியத்துடன், தன்னுடைய விலை மதிப்பற்றப் பொருட்களை, தங்கள் வீட்டில் உள்ள பாதுகாப்புப் பெட்டகம் போன்றவற்றில் பாதுகாக்க முனைகின்றனர்.
பாதுகாப்புப் பெட்டகம் உங்களின் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். உங்களுடைய வீடே பாதுகாப்பாக இல்லாத பொழுது, வீட்டில் உள்ள பாதுகாப்புப் பெட்டகம் மட்டும் பாதுகாப்பானதா? இந்தக் கேள்விக்குப் பதில் தேடும் முன்னர் ஒரு கணம் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை மனதில் நினைத்துப் பாருங்கள். உங்களுடைய பெற்றோர் எத்தனையோ கஷ்டப்பட்டுப் பாதுகாத்து வந்த நம்முடைய முன்னோர்களின் விலையுர்ந்த பொருட்களைப் பாதுகாத்து அடுத்தத் தலைமுறைக்குத் தரவேண்டிய கடமை நமக்கு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
புத்திசாலிகள் ஒரு சில அதி புத்திசாலிகள், நாங்கள் எங்களுடைய வீட்டிற்குக் காப்பீடு செய்துள்ளோம். எனவே விலையுர்ந்த பொருட்களின் பாதுகாப்பைப் பற்றிய கவலை எங்களுக்கு இல்லை எனக் கூறலாம். காப்பீடு என்பது இழந்த பொருட்களுக்கு உரிய இழப்பீட்டை மற்றுமே தரும். காப்பீடானது, பொருட்களுக்கு உரிய பாதுகாப்பை கண்டிப்பாகத் தராது. எனவே நாம் நம்முடைய பொருட்களைப் பாதுகாக்க ஒரு சிறந்த இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அதை மிகவும் பாதுகாப்பான இடம்தான் லாக்கர் என அழைக்கப்படும் வங்கியின் பாதுகாப்புப் பெட்டகம். இது முற்றிலும் நம்பகமானது கிடையாது. ஏனெனில் வங்கிப் பெட்டகத்தில் உள்ள பொருட்களுக்கு அந்த வங்கி ஒரு பொழுதும் பொறுப்பேற்காது.
வங்கி கொள்ளை வங்கி கொள்ளை என்பது மிகவும் அரிதான சம்பவம் ஆகும். எனவே நம்முடைய விலை மதிப்பற்ற பொருட்களை நம்முடைய வீட்டில் வைத்துப் பாதுகாப்பதை விட வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருப்பது நல்லது. எனினும் புதிதாக வங்கிப் பெட்டக கணக்கை ஒருவர் தொடங்கும் முன்னர் ஒரு சில முக்கியமான விஷயங்களை மனதில் பதிய வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
1. வங்கித் தேர்வு: தேசியமயமாக்கப்பட்ட வங்கியைத் தேர்வு செய்யுமாறு பலர் அறிவுறுத்துகின்றார்கள். மேலும் சிலர் தனியார் வங்கிகளைத் தேர்வு செய்யுமாறு ஆலோசனை வழங்குவார்கள். இரண்டு வங்கிகளுமே சரியானது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. வங்கிகளைத் தேர்வு செய்யும் பொழுது அவர்கள் கடைப்பிடிக்கும் விதிமுறைகளையும் ஒழுங்குமுறைகளையும் சரிபார்க்கவும். உங்கள் தேவைகளுக்குப் பொருந்தி வரும் வங்கியைத் தேர்வு வெய்யவும். அதில் மிக முக்கியமானது உங்களுடைய பட்ஜெட்டிற்குப் பொருந்தி வரும் வங்கியைத் தேர்வு செய்யவும். ஏனெனில் ஒரு சில வங்கிகள் தங்களுடைய பாதுகாப்புப் பெட்டகங்களுக்கு மிக அதிகமான வாடகையை வசூலிக்கின்றன. ஒரு சில வங்கிகள் மிகக் குறைந்த அளவே வாடைகைய் வசூலிக்கின்றன. வாடகையில் வித்தியாசம் இருந்தாலும், பாதுகாப்பு அம்சத்தில் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.
2. பாதுகாப்பு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்: பெரும்பாலும் அனைத்து வங்கிகளும் தங்களுடையதற்போதைய வாடிக்கையாளருக்கு மட்டுமே பாதுகாப்பு பெட்டக சேவையை வழங்குகின்றன. எனவே, உங்களுக்குப் பாதுகாப்பு பெட்டக வசதி வேண்டுமெனில் ஒரு சேமிப்புக் கணக்கை அந்த வங்கிக் கிளையில் நீங்கள் கட்டாயம் திறக்க வேண்டும். இதன் மூலம் வங்கியிடம் உங்களைப் பற்றிய அனைத்து விபரங்களும் KYC படிவ வடிவத்தில் கிடைத்து விடும். முதன் முதலாகப் பாதுகாப்பு பெட்டக வசதியைப் பெறும் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம் என்னவெனில், லாக்கரின் வாடகைக்கு ஈடாக வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களிடம் பாதுகாப்பு வைப்பு நிதியை வசூலிக்கும். எனவே அனைத்து வங்கிகளும், சேமிப்புக் கணக்குகளுடன் நிரந்தர வைப்பு நிதியை வலியுறுத்துகின்றனர். சில வங்கிகள் மிக அதிக அளவு தொகையை நிரந்தர வைப்பு நிதியாக வசூலிக்கின்றன. எனினும் ஒருவர் பாதுகாப்பு பெட்டகத்தின் மூன்று வருட வாடகையை மட்டும் நிரந்தர வைப்பு நிதியாகச் செய்தால் போதுமானது. இந்த மூன்று வருட பாதுகாப்பு நிதியானது, ஒருவேளை நீங்கள் பாதுகாப்பு பெட்டகத்தின் வாடகையைச் செலுத்த வில்லை எனில் வாடகையை வசூல் செய்யப் பயன்படும். எனவே வங்கியின் பாதுகாப்பு பெட்டக வசதியைப் பெறுவதற்கு விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்யும் முன்னர் அதில் உள்ள அனைத்து அம்சங்களையும் கவனமாகப் படித்துப் பார்க்கவும்.
3. பாதுகாப்புப் பெட்டகத்தில் எப்பொழுதும் ஒரு கண் வைத்திருங்கள்: நீங்கள் ஒரு லாக்கரைப் பெற்று அதில், விலையுயர்ந்த பொருட்களை வைத்து விட்டீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதோடு உங்களுடைய வேலை முடியவில்லை. ஒரு சீரான இடைவெளியில் உங்களுடைய பாதுகாப்புப் பெட்டகத்தைப் பார்வையிடுவது மிகவும் முக்கியம். சில வங்கிகள் 6 மாதங்களில் ஒரு முறை அல்லது ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் 15 முறை பாதுகாப்புப் பெட்டகத்தைப் பார்வையிடவேண்டும் என வலியுறுத்துகின்றன.
4. கணக்கு வகை: ஒரு சிறந்த மற்றும் சுமூகமான செயல்பாட்டுக்கு, பாதுகாப்புப் பெட்டகம் என்பது ஒரு கூட்டுக் கணக்காக இருக்க வேண்டும். இதை வங்கிகள் பொதுவாக வலியுறுத்துவதில்லை. அதோடு உங்களுடைய பாதுகாப்பு பெட்டக கணக்கிற்கு வாரிசுதாரர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஏனெனில் உங்களுக்கு ஏதாவது எதிர்பாராத அசம்பாவிதம் நேர்ந்து விட்டால், உங்களுடைய பாதுகாப்பு பெட்டக கணக்கு எந்த வித தொந்தரவும் இல்லாமல் செயல்படும்.
5. விலையுயர்ந்த பொருட்களின் மீது ஒரு கண் வைத்திருங்கள்: ஏற்கனவே கூறியபடி, பாதுகாப்புப் பெட்டகத்தை ஒரு சீரான இடைவெளியில் பார்வையிடுவது மிகவும் அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம் விலையுயர்ந்த பொருட்களின் மீது நீங்கள் ஒரு கண் வைத்திருக்க உதவுவதுடன், நகைகள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களின் பாதுகாப்பை உறுதிசெய்கின்றன. அதோடு பாதுகாப்புப் பெட்டகத்தில் புதிய நகைகளைச் சேர்ப்பது அல்லது அகற்றுவதை எளிதாக்க உதவும்.
பிற முக்கியமானவை இந்தப் பொது விதிகளைத் தவிர, வங்கிகள் எச்சரிக்கை அமைப்பு, இரும்புக் கம்பி அறைகள், சி.சி.டி.வி வழியாக மின்னணு கண்காணிப்பு போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நீங்கள் எப்பொழுது லாக்கரைத் திறக்கச் சென்றாலும் உங்களுடன் உடன் வரும் பணியாளர் வெளியே சென்றவுடன் லாக்கரைத் திறக்கவும். லாக்கரில் உங்களுடைய வேலை முடிந்த உடன் அதை ஒழுங்காகப் பூட்டி விட்டீர்களா என்பதை ஒரு முறைக்கு இருமுறை உறுதி செய்து கொள்ளவும்
பாதுகாப்பு லாக்கரில் வைத்திருக்கும் விலையுர்ந்த பொருட்களின் பட்டியலை எப்பொழுதும் உங்களுடன் வைத்திருக்கவும். நகைகளை அதனுடைய பில்களுடன் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் ஒரு வேளை உங்களுக்கு இழப்பு ஏற்பட்டால் உங்களுடைய சொத்துக்களின் மதிப்பு உங்களுக்குத் தெரிய வரும். இங்கே குறிப்பிடத்தக்க மற்றொரு எச்சரிக்கை என்னவெனில், நீங்கள் லாக்கரில் வைத்திருக்கும் ஒவ்வொரு ஆவணத்தையும் லேமினேட் செய்து வைத்திருக்க வேண்டும். அதோடு அந்த ஆவணங்களின் ஒரு நகலை எப்பொழுதும் உங்கள் வசம் வைத்திருக்க வேண்டும். மேலும் லாக்கரில் மிக முக்கியமான மற்றும் மிகவும் தேவையான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டாம்.