Header

சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு ரிஸ்க் அதிகமானது ஏன்?

 சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு ரிஸ்க் அதிகமானது ஏன்?



               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


சாதாரண மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தினை விட சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு ரிஸ்க் அதிகமானது ஏன் ?
International Mutual Fund

மியூச்சுவல் ஃபண்டு என்பது முதலீட்டார்களிடம் இருந்து பணத்தினைப் பெற்று அவர்கள் சார்பாகப் பங்குச் சந்தை போன்ற திட்டங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டி தருவதாகும்.

மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தினைப் பொருத்தவரை இந்தியர்கள் இந்திய நிறுவனம் மட்டும் இல்லாமல் வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். ஆனால் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் இந்தியா திட்டங்களில் முதலீடு செய்வதை விட அதிக ரிஸ்க்குகள் உள்ளன.

சாதாரண மற்றும் சர்வேதேச மியூச்சுவல் ஃபண்டு வித்தியாசம் என்ன?
சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் என்பது முதலீட்டாளர்கள் அவர்கள் நாட்டை விடப் பிற நாடுகளின் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வதாகும். சாதாரண மியூச்சுவல் ஃபண்டு என்பது முதலீட்டாளர்கள் வசிக்கும் நாடுகளில் முதலீடு செய்வதாகும்.

சாதாரண மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை விடச் சர்வதேச திட்டங்களில் ரிஸ்க் அதிகம் உள்ளவையா?
நல்ல மியூச்சுவல் ஃபண்டு மேலாளர்கள் என்றால் முதலீடுகளின் மேலே உள்ள ரிஸ்க்கை குறைப்பது ஆகும். இதுவே சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு என்றால் அதிக ரிஸ்க், கரண்ஸி விலை மாற்றம், பொருளாதாரம் என அனைத்தும்பிரச்சனை தான்.

தற்போதைய சுழலில் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை விட இந்திய மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் ரிஸ் குறைவு மற்றும் அளிக்கக்கூடியவை ஆகும்.

சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகளில் எத்தனை ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்?
தேசிய மற்றும் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகளில் 5 முதல் 7 வருடங்கள் வரை முதலீடு செய்யும் போது நல்ல லாபம் அளிக்கும்.

யாருக்குச் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகள் சிறந்த தேவையாக இருக்கும்?
அதிக ரிஸ்க் மற்றும் தைரியமாக முதலீடுகளைச் செய்ய விரும்புபவர்கள் தான் பெரும்பாலும் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வார்கள்.

இந்தியாவில் முதலீடு செய்ய எத்தனை சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன?


இந்தியர்கள் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 35 திட்டங்கள் உள்ளன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்தத் திட்டங்களில் லாபம் சரிந்து கொண்டே வருகின்றன.