Header

பேமென்ட் (Payment Banks) வங்கிகளின் நிறை குறைகள் ?

பேமென்ட் (Payment Banks) வங்கிகளின் நிறை குறைகள் ?


          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை சுமார் 11 பேமென்ட் வங்கிகளுக்கு உரிமங்களை வழங்கியுள்ளது. இந்த வங்கிகள் சாமானிய மக்களுக்கு என்ன சேவை அளிக்கிறது.
இதன் மூலம் நமக்கு என்ன லாபம்..? இத்தகைய வங்கிகளில் நாம் எதை கவனிக்க வேண்டும்.. எந்த விஷயத்தில் உஷாராக இருக்கும். இதுக்குறித்து ஒரு சின்ன அலசல்.. வாங்க பார்போம்.

வைப்புத் தொகைகளின் மீது தரப்படும் வட்டி விகிதம்
பேமென்ட் வங்கிகள் டிஜிட்டல் வாலட்டுகளுடன் ஒப்பிடும் போது மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்குகின்றன. ஆனால் பாரம்பரிய வங்கிகளைப் போல அதே அளவு வசதிகள் இல்லை. அவர்களுடைய சேவைகளை நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அவர்கள் வழங்கும் வட்டி விகிதத்தை சரிபாருங்கள்.
பாரம்பரிய வங்கிகளைப் போலவே பேமென்ட் வங்கிகளும் கூட சேமிப்புக் கணக்குகளில் போடப்படும் வைப்புத் தொகைகளுக்கு வட்டியை வழங்குகின்றன.
ஆனால் வட்டி வகிதம் குறிப்பிடத்தக்க அளவு வேறுபடும். தற்போது, வருடாந்திர வட்டியாக ஏர்டெல் பேமென்ட் வங்கி 7.25% வழங்குகின்றது, இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி 5.5% வழங்குகின்றது மற்றும் பேடிம் பேமென்ட் வங்கி 4% வழங்குகின்றது.

வசதி மற்றும் எல்லையளவு
பேமென்ட் வங்கிகள் இதர வங்கிகளிலிருந்து பணம் எடுப்பதற்கு பயன்படுத்தக் கூடிய ஏடிஎம் கார்டுகளை வழங்குகிறதா என்று விசாரித்து தெரிந்துக் கொள்ளுங்கள். தற்சமயம் ஏர்டெல் அது போன்ற ஏடிஎம் கார்டுகளை வழங்குவதில்லை.
இருந்தாலும், உங்களுக்கு ஒரு டெபிட் கார்ட் தேவை என்றால், இந்தியா போஸ்ட் அல்லது பேடிம் உங்களுக்கு சிறப்பாகப் பொருந்தும்.

தொகுக்கப்பட்ட சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
பெரும்பாலான பேமென்ட் வங்கிகள் என்பிஎப்சி இல்லாத பாரம்பரியத்தைக் கொண்டிருக்கின்றன. மேலும் பேமென்ட் வங்கிகளை வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் மற்றும் கையகப்படுத்தும் ஒரு இயங்கும் முறையாக பயன்படுத்துகின்றன.
உதாரணமாக, பேடிம் அதன் இ-வர்த்தக தளத்தில் பேடிம் பேமென்ட் வங்கிக் கணக்கின் வழியாக நீங்கள் ஷாப்பிங் செய்தால் பணத்தை மீளப் பெறுதல் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது. ஏர்டெல் பேமென்ட் வங்கிக் கணக்கின் வழியாக கட்டணங்களுக்குப் பணம் செலுத்தும் வசதிகளைப் பயன்படுத்தினால் ஏர்டெல் உங்களுக்குத் தள்ளுபடிகளை வழங்குகிறது.
எனவே, நீங்கள் பெரும்பாலும் எத்தகைய வசதிகளைப் பெற விரும்புகிறீர்கள் மற்றும் எந்த வகை தொகுக்கப்பட்ட சலுகைகள் மற்றும் சேவைகளை வங்கிகள் வழங்குகின்றன என்பதைப் பொறுத்து நீங்கள் பேமென்ட் வங்கியைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும்.

மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளுக்கான கட்டணங்கள்
வட்டி விகிதங்களைப் போலவே பேமென்ட் வங்கிகளால் வழங்கப்படும் சேவைகளுக்கு விதிக்கப்படும் கட்டணங்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். உதாரணமாக ஏர்டெல் பேமென்ட் வங்கி நீங்கள் பணத்தை எடுத்தால் 0.65% மற்றும் நீங்கள் வேறு வங்கிக்கு பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட தொகையின் மீது 0.5% சேவைக் கட்டணங்களை விதிக்கிறது.
வாடிக்கையாளர்கள் உயர்ந்த டிக்கெட் பரிவர்த்தனைகளுக்கு கணிசமாக உள்ள மதிப்புக் கூட்டப்பட்ட அம்சங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் மீதான கட்டண உயர்வுகளை கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியமாகும்.

பாரம்பரிய வங்கிகளுக்கு இது மாற்றல்ல
பேமென்ட் வங்கிகள் பாரம்பரிய வங்கிகள் போல வாடிக்கையாளர்களுக்கு பணத்தை முன்தொகையாகவோ கடனாகவோ கொடுக்காது. அவை காசோலைப் புத்தகங்களையும் மற்றும் டெபிட் கார்டுகளையும் வழங்கும்.
ஆனால் க்ரெடிட் கார்டுகளை வழங்காது. மேலும், பாரம்பரிய வங்கிகள் போல அல்லாமல் பேமென்ட் வங்கிக் கணக்குகளில் ஒரு வரையறுக்கப்பட்ட தொகையை மட்டுமே நீங்கள் வைத்திருக்க முடியும். தற்போது ஒரு கணக்குக்கு ரூபாய் 1 லட்சம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பேமென்ட் வங்கிகள், நிறுவப்பட்ட பாரம்பரிய வங்கிகளுக்கு மாற்று அமைப்பு அல்ல. பாரம்பரிய வங்கிகள் நிறைய சேவைகளை வழங்குகின்றன. பாரம்பரிய வங்கிகள் மற்றும் டிஜிட்டல் வங்கிகள் இரண்டுமே அவற்றிற்குரிய சொந்த தகுதிகளைப் பெற்றிருக்கின்றன. மேலும் ஒன்றுக்கு மற்றொன்று மாற்றாக இருக்க முடியாது.