Header

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும்

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும்
How should you select your first mutual fund scheme




வாழ்க்கையில் நமக்கு இருக்கும் பல்வேறு முதலீட்டு தேர்வுகளில் பரஸ்பர நிதி திட்டம் எனப்படும் மியூச்சுவல் ஃபண்ட்திட்டமும் ஒன்று. இன்றைய நிலையில் பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய தயங்குவோர் அல்லது பயப்படுவோருக்கு மியூச்சுவல் ஃபண்ட்திட்டம் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.
இத்திட்ட முதலீட்டில் பல்வேறு பாதிப்புகள் உள்ளது, இதில் லாபத்தை அடைந்துவிட்டால் உங்களுக்கு நம்பிக்கையை உருவாக்கும் இல்லையெனில் நம்பிக்கையை முழுமையாக உடையும். ஆகவே முதலீடு செய்வதற்கு இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.


கை நிறைய லாபம்
நீங்கள் தேர்வு செய்யும் பரஸ்பர நிதித் திட்டம் கைநிறைய லாபங்களைத் தரவேண்டும் என்றால், பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
பரஸ்பர நிதி முதலீட்டிற்கு தொடக்கக் கால முதலீட்டாளர்களுக்கு ஒரு வழிகாட்டியை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.



முதலீட்டை பிரித்தல்
தொடக்க கால முதலீட்டாளர்கள் உங்கள் முதன்மையான முதலீடுகளை வங்கி வைப்பு நிதிகளிலும் மற்றும் இதர நிலையான வருவாய் திட்டங்களிலும் போட்டுவிட்டு மீதமிருக்கும் தொகையை ஒரு பங்குச் சந்தை நிதி திட்டத்தில் முதலீடு செய்வது சிறந்ததாகும்.

நீண்ட கால திட்டம் உயர்ந்த வருவாயைப் பெறுவதற்கு ஆரம்ப வருடங்களில் நீங்கள் முதலீடு செய்ய தொடங்கியிருக்கும் போது உயர்ந்த வருவாயைப் பெற நீண்ட கால திட்டங்களைத் தேர்ந்தெடுங்கள். நீண்ட கால முதலீட்டுத் தேர்வுகளில் பங்கு சந்தை சிறந்தது அதிலும் பரஸ்பர நிதிகளின் வழியாக முதலீடு செய்வது தொந்தரவில்லாத மற்றும் பாதுகாப்பான பந்தயமாகும்.


வரி விதிப்பு வரிவிதிப்பு தொடர்பான இதர நன்மைகளைப் பெறுவது தொடர்பாக நீங்கள் முதலில் உயர்ந்த வருவாயைத் தரும் நீண்ட கால சமச்சீர் நிதிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

நிதி ஒதுக்கீடு நிதி ஒதுக்கீட்டு பண்பு காரணமாக முதலீட்டாளர் தற்போதைய பங்கு மற்றும் கடன் விகிதங்களை பராமரிக்க 65:35 க்கு நெருக்கமான அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும். தேவையான அளவை மட்டக்குறி, பங்கு சார்ந்த திட்டமாக இருந்து, வரிச் சலுகைகளைப் பெரும் திட்டமாகவும் இருக்க வேண்டும்.

சிறந்த முதலீட்டு தேர்வு எனவே, கடன் உட்கூறுகளுக்கு வரிச் சலுகைகள் மற்றும் 15% உயர் வருவாய் சமச்சீர் நிதிகளிலிருந்து கடந்த ஒரு வருடமாக ஈட்டப்பட்டுள்ளது. இது, முதல்முறையாக முதலீடு செய்யும் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், அவர்களுடைய மதிப்பீட்டில் பெரிய விலைச் சரிவை சந்திக்க விரும்பாதவர்களுக்கு நல்ல தேர்வாகும். ஆனால், நிச்சயமாக இது அபாயமற்றதும் அல்ல. மேலும் ஒரு புதிய முதலீட்டாளராக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள குறைந்தளவு மாறும் தன்மைக் கொண்ட சில சமச்சீர் நிதி திட்டங்களில் (balanced fund schemes) முதலீடு செய்வதை கருத்தில் கொள்ளலாம்.

குறைந்த ஆபத்து சமச்சீர் நிதி திட்டங்களில் வளர்ச்சியுடன் உங்கள் முதலீட்டிற்கு பாதுகாப்பையும் நீங்கள் எதிர்ப்பார்க்கலாம். மேலும். சந்தையில் சரிவுகள் ஏற்படும் போது குறைவான வீழ்ச்சிக்கு உட்படும் பங்குச் சந்தை நிதி திட்டமாக இது அதிக பாதுகாப்பை வழங்குகிறது. எனவே தொடக்க கால முதலீட்டாளர்களுக்கு சிறந்த தேர்வாக நிரூபணமாகியுள்ளது.

ஈஎல்எஸ்எஸ் அல்லது வரி சேமிப்பு பரஸ்பர நிதி திட்டம் சமச்சீர் நிதிகளில் வழங்கப்படுவதைப் போல ஈஎல்எஸ்எஸ் திட்டத்திலும் வரி சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இந்த வரி விலக்கு யு/எஸ்80சி பிரிவின் கீழ் அளிக்கப்படுகிறது. 2017 ஆம் ஆண்டின் யூனியன் பட்ஜெட்டின்படி ஒரு முதலீட்டாளர் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை ஒரு நிதியாண்டில் முதலீடு செய்யலாம். மேலும் இந்தப் பிரிவின் கீழ் வரிவிலக்கிற்கு தாக்கல் செய்யலாம்.



3 வருடம் ஒரு முதலீட்டாளர் இந்த திட்டங்களின் நீண்ட காலவரையறை வரை இருக்கலாம். உதாரணமாக, குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் என்று வைத்துக் கொண்டால் அதுவே இந்த நிதி திட்டத்திற்கான பூட்டுக்காலமாகும். எனவே வரிவிலக்குடன் இந்த நிதி திட்டத்திலிருந்து நீங்கள் நியாயமான வருவாயை அறுவடை செய்யலாம்.